Wednesday, April 13, 2016

கலைஞரை ஏன் ஆதரிக்க வேண்டும்

  தனது பெயரில் இருக்கும் ஒரே வீட்டை தனது குடும்பத்தார் அனைவரிடமும் ஒப்புதல் வாங்கி, இன்று பல கோடி பெறுமானமுள்ள அந்த சொத்தை பொது மக்களுக்கு இலவச மருத்துவமனையாக தனது காலத்திற்கு பிறகு உபயோகித்துக் கொள்ள தனது கட்சிகாரர்கள் ஒரு சிலர் பெயரில் டிரஷ்ட் ஒன்றை உருவாக்கி அதை தானமாக கொடுத்துள்ளார். எவனுக்கு வரும் இந்த மனது. மேலும் தனக்கு சன் டிவி மூலமாக கிடைத்த பணத்தை அதற்கு ஒரு டிரஷ்ட்டை உருவாக்கி வங்கியில் இருப்பு வைத்து அதில் வரும் வட்டி வருமானத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவிட வழி வகை செய்துள்ளார் இந்த மனசு யாருக்கு வரும். ஒரு ஆதிக்க சக்தி கூட்டம் எந்த காலத்திலும் ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு அவர் மீது இல்லாததையும், பொல்லாததையும் எடுத்துக் கூறி இந்த பாழா போன மக்களை நம்ப வைத்து அரசியல் பண்ணுகிறார்கள், உண்மையான தமிழர்கள் அதற்கு துணை போகாதீர், நாம்தான் கலைஞரின் கரத்தை பலப்படுத்த வேண்டும்.
         அன்று ஆதிக்க சக்திகளின் ஊடகங்கள், இன்று சுயநல சக்திகளின் ஊடகங்கள், கேவலம் பணத்திற்காக தமிழனின் வாழ்வையும், தமிழ் நாட்டின் எதிர்காலத்தையும் அடகு வைக்கிறார்கள், தீயசக்திகளை வளர்த்து விட்டு அதில் குளிர் காய நினைக்கும் ஊடக நண்பர்களே, நான் வயறெறிந்து சொல்கிறேன் இந்த பாழா போன தமிழ் சமுதாய பாவம், பணத்தாசை பிடித்த உங்களையும், உங்கள் குடும்பத்தையும் சும்மா விடாது.
             ஏய் தமிழா நீயும் உன் சந்ததியும் நன்றாக இருக்க வேண்டுமானால் கலைஞரை ஆதரிக்க வேண்டும், தீய சக்திகள் நிறைய தோன்றி கலைஞர் மீது இல்லாத தையும், பொல்லாத தையும் கூறி வருகின்றன அதையெல்லாம் நம்பாதே, நம்பி வீண் போகாதே உன் எதிர் காலம் கலைஞர் கையில்.

            " வளர்த்த கடா மார்பில் பாய்ந்த தடா "
எந்த நேரத்தில் இந்த பாடலை எழுதினாரோ, ஏகப்பட்ட கடாக்கள் அவருடைய மார்பில் பாய்ந்து விட்டன மனுஷன் இன்னும் அசராம இந்த இனத்துக்ககாக ராவும் பகலும் அயராது உழைத்துக்கொண்டிருக்கிறார் அந்த உழைப்புக்கு. ஊக்கம் அளிக்க கலைஞரை ஆதரிப்போம்.