Saturday, July 18, 2009
இவர்தாம்ல முதல்வரு
கட்சி அலுவலகத்தில்இருந்து மந்த்திரிகள் பட்டியலை எடுத்துக்கொண்டு கோட்டை நோக்கிப்பரன்த்தார் அண்ணாச்சி. கோட்டைக்குச் சென்றதும் தலைமைச் செயலரை தனது அறைக்கு அழைத்தார். செயலர் வந்ததும், அய்யா வாங்க உட்காருங்க என்றார். என்ன, நான் சொன்ன லிஸ்ட் தயார் பண்ணீட்டீங்களா, ஆமாய்யா, எல்லாம் ரெடி. அந்த செயலர்கள் எல்லாரையும் இப்ப சந்திக்க முடியுமா, ஒ இப்பவே வரச்சொல்றேன் என்றார். எல்லோரும் வந்து அமர்ந்தார்கள், அண்ணாச்சி பேச ஆரம்பித்தார் நான் எதுக்கு உங்களைஎல்லாம் வரச்சொன்னேன்னா நம்ம ஆட்சி வந்து ரொம்ப சுத்தமா, நேர்மையா இருக்கணும் அதுக்கு நான் என்ன வேணுன்னாலும் செய்ய தயாரா இருக்கேன். நான் எப்படி உங்களை தேர்ந்தெடுத்தேனோ அதே மாதிரிஉங்கள் பி ஏய் க்களை தேர்ந்த்தேடுத்துக்குங்க ஏன்னா உங்களுக்குத் தெரியாமலேயே ஆட்டம் போட ஆரம்பிச்சிடுவாங்க அப்புறம் நான் உங்களைத்தான் கேட்பேன் என்றார், நான் கேட்ட விவரமெல்லாம் ரெடியா. எல்லாம் இதோ இருக்குதையா என்று தலைமைச்செயலர் டேபிளில் வைத்தார். நான் ஏன் இதெல்லாம் கேக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும் நானும் என்னுடைய சொத்து விவகாரங்களை நேற்றே கொடுத்துவிட்டேன். எல்லாம் எங்களுக்கு தெரியும் அய்யா என்றனர் அனைவரும். மந்திரிகள் எல்லோரும் அவுங்க சொத்து விவரமெல்லாம் நாளைக்கு என்னிடம் கொடுக்கிறார்கள் என்றார். மந்திரிசபை பதவியேட்புவிழா இன்னும் ஒரு சில நாட்களில் தீவுத்திடலில் நடக்க இருக்கு அதுக்கு முன்னால நம்ம அரசோட திட்டங்களைத் தீட்டி அந்தக்கூட்டத்துல மக்கள் முன்னால அறிவிக்கனும், அதுக்குண்டான வேலைகளை இப்போ பார்ப்போம் என்றார்.
Wednesday, July 15, 2009
கட்சி அலுவலகத்திற்கு வந்தார்அண்ணாச்சி, அங்கே சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடிஇருந்தர்கள். அண்ணாச்சி பேச ஆரம்பித்தார் இங்க பாருங்க மக்கள் வந்து நம்மளை அவுங்களுக்கு உழைக்கிரதுக்காகத்தான் தேர்ந்த்தேடுத்திருக்காங்க அதனால நம்ம மந்திரி சபைல மொத்தம் பன்னிரண்டு மந்திரி போடப்போறோம். மந்திரி எல்லோரும் அவுங்க, அவுங்க குடும்பத்தார் சொத்து விவரம் எல்லாம் எனக்கு வேணும். யாராவது ஒரு சின்ன தப்பு செய்தாலும் அவுங்க மேல உடனே நடவடிக்கை எடுக்கப்படும். கட்சிக்காரங்க யாரும் அரசு நிர்வாகத்துல தலையிடக் கூடாது. அதே சமயத்ல மக்கள் பிரச்சனைக்காக அதிகாரிகளை அணுகலாம், எந்த அதிகாரியாவது மக்களுக்கு எதிர்ப்பா ஏதாவது செஞ்சா என்கிட்டே சொல்லுங்க நான் பாத்துக்கிறேன் .
Sunday, July 12, 2009
இவர்தாம்ல முதல்வரு
காணுங்கள் கனவு என்றார் கலாம் அப்துல்கலாம் இது ஒரு கிராமத்து பாமரனின் கனவு .
தமிழகத்துத்தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன பெரும்பான்மையான இடங்களில் மக்கள் பொதுவுடமை கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றதாக செய்திகளும் வந்துகொண்டு இருக்கின்றன. கட்சித் தலைவரிடம் கேட்டபோது இன்னும் ஓரிரு நாளில் வெற்றிபெற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் அதன் பிறகு முதல்வர் யார் என்பது தெரியும் என்று கூறினார்.
முதல்வராக சுடலை அண்ணாச்சி தேர்ந்த்டுக்கப்பட்டிருப்பதகவும் இன்று மாலை அவர் மட்டும் ஆளுநர் இல்லத்தில் பதவி ஏற்க இருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.கூட்டம் நடந்த இடத்தில் கட்சியில் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது ,அய்யா எனது பெயரை வெளிஇட்டு விடாதீர்கள் இந்த ஆளு ஒரு "அடாவடி"ஆன ஆளு, கட்சிக்காரன் யாரும் ஒன்னும் பண்ண முடியாது என்றார்.
பதவியேற்று வெளியே வந்த அண்ணாச்சியை செய்தியாளர்கள் சுற்றிக் கொண்டு கேள்விகளைக் கேட்டார்கள். அய்யா நீங்கமட்டும் பதவி எத்துருககீங்க என்று கேட்டபோது, கட்சித் தலைமை தற்போது என்னை மட்டும் பதவியேற்க சொல்லிஇருக்கு கூடிய சீக்கிரம் மற்ற மந்திரிகள் பதவியேற்பார்கள் என்று கூறிவிட்டு வேகமாக காரில் ஏறி பறந்தார்.
சட்டமன்ற வளாகத்திற்கு வந்த அண்ணாச்சி தலைமைச் செயலாளரை அழைத்தார், ஒரு பன்னிரண்டு நேர்மையான அதிகாரிகள் பெயர்கள் அவுங்க குடும்ப பின்னணி விவரம் எல்லாம் நாளைக்கு எனக்கு வேணும் என்று கூறி விட்டு , ஒரு சில கோப்புகளில் கையெழுத்திட்டார், பின்னர் தலைமைச் செயலரிடம் சிறிது நேரம் பேசி இருந்து விட்டு கட்சி அலுவலகம் நோக்கிப் பறந்தார்.

Saturday, July 11, 2009
அடாவடி அண்ணாச்சி
- வணக்கம் நான் இன்னைக்குதான் முதல் முதலா உங்களை எல்லாம் சந்திக்கிறேன் ரொம்ப மகிழ்ச்சி வருங்காலங்களில் நம்முடைய அடாவடிகளை பார்க்கலாம் ரொம்ப நன்றி
Subscribe to:
Posts (Atom)