காணுங்கள் கனவு என்றார் கலாம் அப்துல்கலாம் இது ஒரு கிராமத்து பாமரனின் கனவு .
தமிழகத்துத்தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன பெரும்பான்மையான இடங்களில் மக்கள் பொதுவுடமை கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றதாக செய்திகளும் வந்துகொண்டு இருக்கின்றன. கட்சித் தலைவரிடம் கேட்டபோது இன்னும் ஓரிரு நாளில் வெற்றிபெற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் அதன் பிறகு முதல்வர் யார் என்பது தெரியும் என்று கூறினார்.
முதல்வராக சுடலை அண்ணாச்சி தேர்ந்த்டுக்கப்பட்டிருப்பதகவும் இன்று மாலை அவர் மட்டும் ஆளுநர் இல்லத்தில் பதவி ஏற்க இருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.கூட்டம் நடந்த இடத்தில் கட்சியில் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது ,அய்யா எனது பெயரை வெளிஇட்டு விடாதீர்கள் இந்த ஆளு ஒரு "அடாவடி"ஆன ஆளு, கட்சிக்காரன் யாரும் ஒன்னும் பண்ண முடியாது என்றார்.
பதவியேற்று வெளியே வந்த அண்ணாச்சியை செய்தியாளர்கள் சுற்றிக் கொண்டு கேள்விகளைக் கேட்டார்கள். அய்யா நீங்கமட்டும் பதவி எத்துருககீங்க என்று கேட்டபோது, கட்சித் தலைமை தற்போது என்னை மட்டும் பதவியேற்க சொல்லிஇருக்கு கூடிய சீக்கிரம் மற்ற மந்திரிகள் பதவியேற்பார்கள் என்று கூறிவிட்டு வேகமாக காரில் ஏறி பறந்தார்.
சட்டமன்ற வளாகத்திற்கு வந்த அண்ணாச்சி தலைமைச் செயலாளரை அழைத்தார், ஒரு பன்னிரண்டு நேர்மையான அதிகாரிகள் பெயர்கள் அவுங்க குடும்ப பின்னணி விவரம் எல்லாம் நாளைக்கு எனக்கு வேணும் என்று கூறி விட்டு , ஒரு சில கோப்புகளில் கையெழுத்திட்டார், பின்னர் தலைமைச் செயலரிடம் சிறிது நேரம் பேசி இருந்து விட்டு கட்சி அலுவலகம் நோக்கிப் பறந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment