Saturday, July 18, 2009

இவர்தாம்ல முதல்வரு

கட்சி அலுவலகத்தில்இருந்து மந்த்திரிகள் பட்டியலை எடுத்துக்கொண்டு கோட்டை நோக்கிப்பரன்த்தார் அண்ணாச்சி. கோட்டைக்குச் சென்றதும் தலைமைச் செயலரை தனது அறைக்கு அழைத்தார். செயலர் வந்ததும், அய்யா வாங்க உட்காருங்க என்றார். என்ன, நான் சொன்ன லிஸ்ட் தயார் பண்ணீட்டீங்களா, ஆமாய்யா, எல்லாம் ரெடி. அந்த செயலர்கள் எல்லாரையும் இப்ப சந்திக்க முடியுமா, ஒ இப்பவே வரச்சொல்றேன் என்றார். எல்லோரும் வந்து அமர்ந்தார்கள், அண்ணாச்சி பேச ஆரம்பித்தார் நான் எதுக்கு உங்களைஎல்லாம் வரச்சொன்னேன்னா நம்ம ஆட்சி வந்து ரொம்ப சுத்தமா, நேர்மையா இருக்கணும் அதுக்கு நான் என்ன வேணுன்னாலும் செய்ய தயாரா இருக்கேன். நான் எப்படி உங்களை தேர்ந்தெடுத்தேனோ அதே மாதிரிஉங்கள் பி ஏய் க்களை தேர்ந்த்தேடுத்துக்குங்க ஏன்னா உங்களுக்குத் தெரியாமலேயே ஆட்டம் போட ஆரம்பிச்சிடுவாங்க அப்புறம் நான் உங்களைத்தான் கேட்பேன் என்றார், நான் கேட்ட விவரமெல்லாம் ரெடியா. எல்லாம் இதோ இருக்குதையா என்று தலைமைச்செயலர் டேபிளில் வைத்தார். நான் ஏன் இதெல்லாம் கேக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும் நானும் என்னுடைய சொத்து விவகாரங்களை நேற்றே கொடுத்துவிட்டேன். எல்லாம் எங்களுக்கு தெரியும் அய்யா என்றனர் அனைவரும். மந்திரிகள் எல்லோரும் அவுங்க சொத்து விவரமெல்லாம் நாளைக்கு என்னிடம் கொடுக்கிறார்கள் என்றார். மந்திரிசபை பதவியேட்புவிழா இன்னும் ஒரு சில நாட்களில் தீவுத்திடலில் நடக்க இருக்கு அதுக்கு முன்னால நம்ம அரசோட திட்டங்களைத் தீட்டி அந்தக்கூட்டத்துல மக்கள் முன்னால அறிவிக்கனும், அதுக்குண்டான வேலைகளை இப்போ பார்ப்போம் என்றார்.

1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete